பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148


3. அதற்குப் பிறகு ஆடவேண்டிய குழுக்களை இணை இணையாக (Pair) இணைத்து, அடைப்புக் குறியிட்டுக் காட்ட வேண்டும்.

தேர்ந்தெடுத்து சிறப்பிடம் தரும் முறை (Special Seeding)

ஒரு ஆட்டத்தில், திறமை பெற்ற ஆட்டக்காரர்கள் அல்லது ஆடும் குழுக்கள் இருப்பதுண்டு.

அவற்றை அவரை முதல் சுற்றிலிருந்து ஆடவிடாமல், நேரடியாக கால் இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்வது போல, சிறப்பிடம் அளிக்கும் முறையும் இருக்கிறது.

இம் முறை சரியானது இல்லையென்றாலும், போட்டித் தொடரில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே கையாளப்படுகின்றது.

இங்கே நாம் 12 குழுக்கள கலந்து கொள்ளும் ஒரு தொடர் போட்டியில், 4 அணிகளைத் தேர்ந்து சிறப்பிடம் தருகிறோம். அந்தப் போட்டிப் பட்டியலை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம்.