பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 50 எ. 4வதாக வருவதை மேல்பாதி 1ல் குறிக்கிறோம். 7. பிறகு குழுக்களை இணை இணையாக சேர்த்து விடுகிறோம். இப்படியாக, இந்தப் போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும். இது போல், எத்தனை குழுக்கள் வந்தாலும், முறையாக சிறப்பிடக் குழுக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பிட விலக்குகனைக் கணக்கிட்டு, நிரலை தயாரிக்க வேண்டும். ஆறுதல் வாய்ப்பு முறை பக்தயங்கள் (Consolation Tournaments) ஒரு வாய்ப்புள்ள போட்டித் தொடரில், திறமை. வாய்ந்த ஒரு குழு ஏதோ ஒரு காரணத்திற்காக, அசாதாரண முறையில் தோற்றுப்போவதுண்டு. அப்படி ஏற்படுகிற தோல்வியால், இடமிழந்து போகும். அந்தத் திறமையான குழு, தனது முழு திறமையையும். வெளிப்படுத்திக் காட்ட முடியாமல் போய் விடுவதால், அப்படிப்பட்ட குறையைப் போக்கி, மீண்டும் ஆட வாய்ப்பளிப்பதன் மூலம், அவர்கள் தங்கள் முழுத். திறமையையும் வெளிப்படுத்திக்காட்டி, மிஞ்சி இருக்கின்ற. வெற்றியையும், பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற. வழி ஏற்படுத்தி வாய்ப்புத் தருவதே, ஆறுதல் வாய்ப்புத் தொடர் போட்டி என்று அழைக்கப்படுகிறது. இதனை, இரண்டு வகையாக்கி, வாய்ப்புத் தருவார்கள். முதலில் முதல் வகையைப் பார்ப்போம். (First Type)