பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16.2 போட்டியிட்டு, இறுதியாக, வெற்றி நிலைக்கு வருவது தான் சிறப்பம்சமாகும். இந்த 2வது வகையில் உள்ள ஆறுதல் போட்டி நிரலில், 2வது முறையே சிறந்ததாக, வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. முறையாக வெற்றிநிலையை அடைந்த குழு வெற்றி யாளராகவும் (Winner) , ஆறுதல் போட்டியில் வெற்றியை அடைந்த குழுவை 2வது வெற்றிக் குழுவாகவும் (Runner8 tp) அங்கீகரிக்கப்படுகிறது. இந்த இரண்டு முறைக்கும் உள்ள ஒற்றுமை-முன்றையாக போட்டியில் வெற்றி பெற்று வந்த குழுவை முதலிடம் கொடுத்து பாராட்டுவது தான். ஆனால், ஆறுதல் போட்டியில் வெற்றி பெற்ற குழுவை 2வது வெற்றிக் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அந்தக் குழு எல்லாக் குழுக்களிடமும் விளையாடி வெல்லாமல், ஆறுதல் போட்டிக் குழுக்களை மட்டுமே வென்றுவருவதால், இது ஒரு குறையாகவே இருக்கிறது. இதில் எத்தனை போட்டி ஆட்டங்கள் நடக்கும் என்று கண்டறிய சூத்திரம் (2n-3). 3. இரட்டை வாய்ப்பு முறை (Double Knock Out) இரட்டை வாய்ப்பு முறை தொடர் போட்டிப் பந்தயத்தில், ஒரு குழு, போட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றால், அது இரண்டு முறை தோற்கடிக்கப்பட வேண்டும்.