பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


166 அதில் வெற்றிபெறுகிற குழுவான 5ம் நம்பருடன் (கீழ்ப்பாதி யில்) அடுத்த பாதியில் வெற்றி பெற்றுள்ள 7ம் நம்பருடன் போட்டியிட வேண்டும். இதில் வெல்லுகிற குழு 3ம் இடத்தைப் பெறுகிறது. குறிப்பு : இந்தப் போட்டியில் 4ம் நம்பர் ஜெயிப் பதற்குப் பதிலாக, 7ம் நம்பர் குழு ஜெயித்துவிட்டால், 7ம் நம்பர் குழு 2ம் இடத்தைப் பெறுகிறது. தோற்ற 4ம் நம்பர் குழு, முன்னரே, இறுதிப் போட்டியில் தோற்றிருந்தாலும் 7ம் நம்பரிடம் தோற்றதன் காரணமாக, மூன்றாம். நிலையைப் பெறுகிறது. 11. தொடர் வாய்ப்புப் பந்தயங்கள் (League or Round Robin Tournment) இந்தப் பந்தய முறையை, 2 வகையாகப் பிரிக்கலாம். 1. ஒரு தொடர் வாய்ப்புமுறை. (Single league) 2. இரட்டைத் தொடர் வாய்ப்பு முறை Double league) - 1. ஒரு தொடர் வாய்ப்பு முறையில், எல்லாக் குழுக் களும், ஒன்றுக்கு ஒன்று என ஒரு தடவை மட்டும். போட்டியிடுகின்றன. இதனால் ஏற்படும் மொத்தம் போட்டி ஆட்டங்களின் எண்ணிக்கை அதற்கான குத்திரம் n (n-1) + 2. -