பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173


தீர்மானிக்க, கீழ்க்காணும் விதிமுறைகளைப் பயன் படுத்தலாம்.

சமகிலையை சமாளித்து வெற்றியைத் தீர்மானிக்கும் விதிகள்

1. சமநிலை பெற்ற் 2 குழுக்களில், முதல் போட்டியின் போது ஒன்றை முதலில் வென்றுள்ள குழுவையே வெற்றிக் குழுவென்று அறிவிக்கலாம்.

2. அப்பொழுதும் வெற்றி தோல்வியை அறின் முடியாத அளவில் சிக்கல் இருந்தால், சமநிலையில் இருக்கும் குழுக்களில், எந்தக் குழு, அதிகமான குழுக்களை வென்றிருக்கிறது என்பதைக், கண்டறிந்து, முதலிடம் கொடுக்கலாம்.

3. மீண்டும் தீர்க்க முடியாதபடி சிக்கல் இருந்தால். எந்தக் குழு அந்தப் போட்டி முழுவதிலும் அதிக வெற்றி எண்கள் பெற்றிருக்கின்றன (Points), அல்லது அதிக கோல்கள் (Goal) போட்டிருக் கின்றன என்பதைக் கண்டறிந்து, முடிவை எடுக்கலாம்.

மேலும் புரிந்து கொள்வதற்காக, தந்திடும் சான்றினைம் பாருங்கள். AB என்ற 2 குழுக்கள், ஹாக்கியில் சமநிலையில் உள்ளன. அதற்கான முடிவினை அறிய உதவும் பட்டியல் இது.