பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


፲ ? )

II ஒருங்கிணைந்த தொடர் போட்டிப் பக்தயங்கள்

(Combination Tournaments) அதிகமான எண்ணிக்கையில், குழுக்கள் பங்கு பெறுகிற போது, இந்தப் பந்தய முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வருகிற குழுக்களை பல பிரிவுகளாக (Group) அல்லது பல தொகுதிகளாகப் (Zones) பிரித்துவிட்டு, ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே ஆடவிட்டு, அவற்றில் வருகிற வெற்றிக் குழுக்களை மட்டும், ஒரு வாய்ப்பு முறை அல்லது பல வாய்ப்புத் தொடர் முறை மூலமாக ஆடவிட்டு, முடிவு காணலாம். தமிழகம் முழுவதும் கலந்து கொள்கிற போட்டி என்று வைத்துக் கொள்வோம். எல்லா குழுக்களையும் கொண்டு வந்து, ஒரிடத்தில் போட்டி நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆகவே, தமிழகத்தை 4 தொகுதியாகப் பிரித்து (A,B,C,D Zones) ஒவ்வொரு தொகுதியையும் ஆங்காங்கே ஆடவிடுகிற முறை. தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கிடையே நடக்கும் குடியரசுப் போட்டிகள், இந்த முறையில் தான் நடத்தப்படுகின்றன. 3-1 . ஒரு வாய்ப்பு முறையுடன் ஒரு வாய்ப்பு முறை (Knock out Cum Knock out) 1 --- A 2 —— """ A தொகுதி 3 --— } _ _ வெற்றிக் குழு 4 - _