இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
180
4. சவால் போட்டிப் பந்தயங்கள் (Challange Tournaments)
சவால் போட்டிப் பந்தயங்கள் ஒற்றையர் பந்தயம், அல்லது இரட்டையர் பந்தயம் உள்ள விளையாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். (Singles and Doubles). பூப்பந்தாட்டம், டென்னிஸ், மேசைப் பந்தாட்டம், டென்னி காட்ட் போன்ற ஆட்டங்களை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
கிரிக்கெட், கைப்பந்தாட்டம் போன்ற முதன்மை விளையாட்டுக்கள் போன்ற குழு விளையாட்டுகளுக்கு, இது தேவைப்படாதது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்கிற அனைவரும், ஒருவருக்கொருவர் தனித் தனியே போட்டியிட்டு, வெற்றி பெற்று வர வேண்டும்.
இந்த முறையில், தனிப்பட்ட சிறந்த வீரர்களை, கவனத்துடன் தேர்ந்தெடுத்து விட முடிகிறது.