பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


183 6. இருவர் சவாலிட்டு ஆடி முடித்து, வெற்றி தோல்வி அறிந்த பிறகு, மீண்டும் அந்த இருவரும் போட்டியிட்டு ஆட வேண்டும் என்பது அவசியம் இல்லை. உம் : 3ம் 4ம் ஆடிய பிறகு, 4 தோற்று விட்டால், மீண்டும் 3ம் 4ம் ஆட வேண்டியதில்லை. 4ம் எண், மற்ற 2, 1 போன்ற நம்பர்களுடன் ஆடலாம். 7. போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்காக, சாக்கு போக்குகள் கூறினால், அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இயற்கைக் காலநிலை மோசமாக இருந்தால் மட்டுமே, ஆட்டம் மாற்றி வைக்கப்படலாம். அப்படி ஆடவராதவர் அல்லது மறுப்பவர், தமது தகுதி இடத்தை விட்டு மாற்றப்படக் கூடிய நிலையை அடைகிறார். 8. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்ளே, ஏணிப் போட்டி நிரலில், முதல் இடத்தை வகித்துக் கொண்டிருப் பவரே, வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார். 4–2. Gasnuw (pop. (Pyramid method) ஏணி முறையில் சற்று மாறுபட்ட வடிவமைப்புள்ளது. இது. ஏணி முறைக்கான விதி முறைகள். அனைத்தும் இதற்குப் பொருந்தும்.