பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


, 187 பயிற்சிகள், ஜிம்னால்டிக் பயிற்சிகள் எல்லாம் சிறப்பான மூழுப் போட்டிகளாகும், அப்போட்டிகளை கடத்தும் முறைகள் 1. @、 10 அல்லது 15 மாணவர்கள் ஒரு குழுவில் இருப்பது போல, பல குழுக்களைப் பிரித்து, ஒவ்வொரு குழு விற்கும் ஒரு குழுத் தலைவனை நியமிக்கவேண்டும். குழுக்களைப் பிரிக்கிறபோது, திறமையில், உடல் வலிமையில் சமமாக மாணவர்கள் இருப்பது போல, பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் அழைப்பது போல, ஏதாவது ஒரு பெயர் தரலாம். (பூக்கள், மிருகங்கள் பறவைகள், நிறங்கள் ஏதாவது ஒன்றில்) முன்னதாகச் சுற்றுக்கொடுத்த விளையாட்டுக்களில் ஏதாவது ஒன்றைப் போட்டி விளையாட்டாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள், முடிவு பெறுவதாக, அந்தப் போட்டி அமைய வேண்டும். குழுக்கள் பெறுகிற வெற்றி நிலைக்கு ஏற்ப, வெற்றி எண்களை அளிக்க வேண்டுல். முதல் இரண்டு, மூன்று, நான்கு நிலைகளுக்காக 5, 3, *s 1 என்று வெற்றி எண்கள் தரலாம்.