பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 புதிய கல்விக் கொள்கையின்படி, கற்பிக்கும் பணி மூன்று முக்கிய நோக்கத்துடன் பின்பற்றப்படுகிறது. 1. *shua and oscàu. Gyägå. (Emphasising the learner) 2. & shuauq9565 also stro Góð (Guiding the searner) 3. * bus and aporosarily bad (promoting the learner) 1. கற்பவரை வலியுறுத்தல் கற்பிக்கும் பொழுது, அங்கு முக்கிய இடத்தை வகிப் பவர்கள் மாணவர்களாகவே இருக்கின்றார்கள். வகுப்பிலே பாட்டுப் பாடுவது, வாய் விளக்கம் தருவது: மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போன்று நடந்தது எல்லாம், இன்று மலையேறிப் போய் விட்டது. மாறாக, போதிக்கும் பொருள் தொடர்பாக, வழி முறைகள் மூலமாக, மாணவர்களின் திறமைகளை வளர்த்து விடுகிற இலட்சியப் பாங்கே, இன்று தலை தூக்கி நிற்கிறது. மாணவர்களின் உண்மையான திறன்களை உணர்ந்து கொண்டு, அவற்றை வளர்த்து விடுகிற முறைகளைக் கையாண்டு; அவர்களுக்கு அறிவார்ந்த அனுபவங்கள் ஏற்பட வழிவகுத்துத் தந்து; அதிகமாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தும் ஏற்பாடுகள் தாம் இன்றைய கற்பிக்கும் முறையின் தலையாய நோக்கமாகத் திகழ்கிறது. 2. கற்பவர்க்கு வழி காட்டுதல் கற்பிப்பவருக்கு ஒரு நோக்கம் மற்றும் கடமை இருப்பது போல, கற்பவருக்கும் இருக்கிறது.