உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


செயலர் பொறுப்பேற்றுள்ளவர், போட்டிக்குழு நடத்துகின்ற கூட்டம், அதில் நிறைவேற்றப்படுகின்ற நீர்மானங்கள் போட்டிகள் பற்றிய போட்டி நிரல், போட்டிகள் , வெற்றி எண் குறிப்பேடுகள், போன்றவற்றைப் பதிவு செய்து, பத்திரப்படுத்தி வைத்திடல் வேண்டும்.

எதிர்ப்பு மனு ஏதாவது வந்தால், அத்னைத் தீர்க்கும் பொறுப்பு, போட்டிக் குழுவுக்குரியதாகும்.

3. மாணவர்களுக்குப் பிடித்த பொருத்தமான வினை யாட்டுக்களைத் தேர்ந்தெடுத்தல்

முதன்மை விளையாட்டுக்கள், ஒடுகளப் போட்டிகள், குட்டிக்கரணமடித்தல், கோபுரப் பயிற்சிகள், அணி நடை முறைகள், தற்காப்புக் கலைகள், தாளலயப் பயிற்சிகள் எல்லாம் போட்டி நடத்துவதற்கு பொருத்திசி" செயல்களாகும்.

இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனை போட்டிப் பட்டியலில் சேர்த்து, கமிட்டியிடம் அனுமதியும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. கால நேர அவகாசம்

உள்ளகப் போட்டிகள் ஆண்டு முழுவது? நடத்தப்பட லாம். கால் ஆண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும்