பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197


காலத்திற்குள்ளே தான் (First and Second Term) அதிகமான போட்டிகள் நடத்தப்பட வேண்டியிருக்கும்.

முன்றாவது பருவம் (Term) முழுத் தேர்வுக்குரிய கால மானதால், அப்பொழுது போட்டிகள் குறைக்கப்பட்டு, படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அவசியத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

பள்ளி முடிந்த பிறகு உள்ள நேரம். விடுமுறை நாட் கனில் போட்டி.கள் நடத்துவது பொருத்தமாக இருக்கும். பந்தயங்களை ஒரு வாய்ப்பு முறை அல்லது தொடர் வாய்ப்பு முறையில் நடத்தலாம்.

5. வெற்றி எண் வழங்குதல்

வெற்றி பெறுகிற குழுக்களின் வரிசைக்கு ஏற்ப, வெற்றி எண்கள் வழங்கப்படல் வேண்டும். முதல் குழுவுக்கு 5 , இரண்டாவது குழுவுக்கு 3, மூன்றாவது குழுவுக்கு ,ே நான்காம் குழுவுக்கு 1 என்பதாக போட்டி முடிந்தவுடன் வழங்கி, அதை வெற்றி எண் அட்டவணையில் பதிந்து விட வேண்டும்.

ஆண்டு இறுதியில், அனைத்துப் போட்டிகளும் முடிந்த பிறகு, அதிகமான வெற்றி எண்களைப் பெற்றிருக்கிற