பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15 ஒடுகளப் போட்டிகள்

(SPORTS MEET).

ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகளை, தனித்திறன் போட்டிகள் என்றும், விளையாட்டுப் போட்டிகள் என்றும் கூறுவார்கள். நாம் ஒடுகளப் போட்டிகள் என்றே கூறுவோம்.

இந்தப் போட்டிகள் இரண்டு வகைப்படும். 1. தரமான போட்டிகள் (Standard Meet) 2. தரமற்ற போட்டிகள் (Non-standard Meet)

தரமான போட்டிகள் என்பது, அகில உலக அமெச்சூர் கழகம் அமைத்துத் தந்துள்ள விதிகளின்படியே நடைபெறுவதாகும்.

தரமற்ற போட்டிகள் என்பது, அந்தந்த வட்டாரத்தினருக்கு ஏற்ப, வசதிக்கேற்ப, இடத்திற்கேற்ப அமைத்துக் கொள்வதாகும்.

1. தரமான போட்டிகள்
ஓடுகளப் போட்டிகளை நடத்துகிற விதி முறைகள்

ஒடுகளப் போட்டிகளை நடத்துவதற்கு, மிகவும் தேர்ச்சியான திட்டமும், தயாரிப்பும் தேவை. ஆர்வம்மும் அனுபவமும் நிறைந்த பலரின் ஒத்துழைப்பும் தேவை.