பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207

திட்டம் தயாரித்தல் : தேர்ந்த ஆட்களை பணியில் இயக்குதல் போன்ற செயல் முறைகளை, இங்கே தொகுத்துக் காண்போம். ஆதலால், நாம் இதனை 3 வகையாகப் பகுத்துப் பார்ப்போம்.

1. போட்டிகளுக்கு முன்புள்ள பணிகள் (Pre-meetwork)

2. போட்டிகளின்போது செய்ய வேண்டிய வேலைகள் (Meet work)

3. போட்டிக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய Gauss, so 5 sir (Post meet work)

1. போட்டிகளுக்கு முன்புள்ள பணிகள்

ஓடுகளப் போட்டிகளை நடத்துவதற்கென்று, நிர்வாகக்குழு நிச்சயமாகத் தேவைப்படுகிறது. (Organising Committee).

தலைமையிடமாகக் திகழும் நிர்வாகக்குழு, பல துணை செயற்குழுக்களை (Sub-Committee) அமைக்க வேண்டும்.

துணைக் குழுக்களின் பெயர்களும் கடமைகளும் 1. 1. விளம்பரக் குழு (Publicity Committee)

போட்டிகள் நடைபெறும் தேதி, இடம், போட்டி நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய குறிப்புக்களை இந்தக் குழு விளம்பரப்படுத்தும் பத்திரிக்கை, ரேடியோ, போட்டி நிரல் சீட்டுகள் மூலமும் இது எல்லோருக்கும் அறிவிக்கின்ற பணியை, ஏற்றுக் கொள்கிறது.

3.2. ஓடுகளத்தரை மற்றும் உதவி சாதனக் குழு Committee for the Grounds and equipments:

போட்டிகளுக்கான மைதானத்தைக் கேட்டு, அனுமதி வாங்கி நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்களில் குறியீடுகளை