பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 அந்தத் திறனும் குணமும், அந்தக் குழந்தையின் வளரும் சூழ்நிலைக்கு ஏற்பவே பெருகி வளர்கிறது. அந்தக் குழந்தையின் கற்கும் ஆர்வம்: ஆர்வம் செயல் வடிவம் பெற ஆசிரியரின் ஆலோசனை: அடுத்துத் தொடர் கின்ற செயலாக்கம். இப்படித்தான் மாணவக் குழந்தை களின் முன்னேற்றத்தைப் படிப்படியாக வளர்த்துக் காட்ட முடியும். மாணவர்களுக்கு இயற்கையாகவே வளர்ச்சி உண்டு. அந்த வளர்ச்சியை அனுபவங்கள் மூலமாக, வளர்த்து விடுவதே ஆசிரியரின் கற்பிக்கும் பணியாக அமைந்திருக் கிறது. முடியாத அளவுக்குக் கற்பனையைக் கூட்டி வைத்துக் கொண்டு காரியமாற்றச் சொல்வதும்; திட்டவட்டமான முடிவு இல்லாமல், குழப்பத்துடன் செயல்படச் சொல்வதும். வளர்ச்சி தருவதற்குப் பதிலாக, வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. சில சமயங்களில் கெடுத்தும் விடுகிறது. ஆகவே, மாணவர்களுக்கு எது தேவை, எது எளிது. எது இனிமையான அனுபவங்களைக் கொடுக்கும், எது ஏற்ற முன்னேற்றத்தை அளிக்கும் என்பனவற்றை ஆய்ந்து, அறிந்து, தெளிந்து, தேர்ந்து, திட்டவட்டமாகத் தருகிற போது தான், திரண்ட பலன்களைப் பெற முடியும் என்பதை ஆசிரியர்கள் எண்ணிப்பார்த்து செயல்பட வேண்டும். ஆசிரியரின் சிறப்பான இந்தப் பணிக்கு உதவும் சில குறிப்புக்களைக் காண்போம். - 1. வகுப்பை சிறப்பாக நடத்துதல்.