பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

அமைத்து, வேண்டிய விளையாட்டு உதவிப் பொருட்களை சேர்த்து, சுமுகமாக தடையின்றி போட்டிகள் நடத்தும் செயல்களை மேற்கொள்கிறது.

3.3. அதிகாரிகளை நியமிக்கும் குழு (Committee for the officials)

போட்டிகளை நடத்தும் திறமை பெற்றிருக்கும், அதிகாரிகளுக்கு எழுதி, அவர்களது ஒப்புதலைப்பெற்றுக் கொண்டு, அதிகாரிகள் அடங்கிய பட்டியலையும் இந்தக் குழு தயாரிக்க வேண்டும்.

நிர்வாகக் குழுவின் அனுமதியுடன், தலைமை அதிகாரியையும் நியமிக்க வேண்டும்.

3.1 இருக்கைகள், தங்கும் வசதிகள் அமைத்துத்தரும் குழு. (Committee for accommodation and seating arrangements)

வெளியூரிலிருந்து வருகிற போட்டியாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் தங்கும் வசதிகளை செய்து தருதல்; விளையாட்டுப் போட்டி விழா நடைபெறும் பந்தல், உட்காரும் இருக்கை வசதிகள்; போட்டியாளர்கள் தங்கி ஒய்வுகொள்ளும் இடங்கள், பார்வையாளர்கள், விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் இடவசதிகள்; கார்கள் மற்றும் வாகனங்கள் நிற்க வசதிகள் போன்றவற்றை, இந்தக்குழு செய்து தரவேண்டும்.

3.5 வரவேற்புக் குழு (Committee for reception)

போட்டிகள் நடைபெறுகின்றபோது, அழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை வரவேற்று, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்த்தும் பணியைக் கைக்கொள்ளும் குழுவாக இது அமைந்திருக்கிறது.