210
பெயர் போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம் முதலிய விவரங்களைக் குறிக்கவேண்டும்.
2. பல்வேறுபட்ட குழுக்கள், துணைக் குழுக்கள் முதலியவற்றையும், குழுக்களில் இடம் பெற்றிருப்போரின் பெயர்களையும் குறித்திட வேண்டும்.
3. போட்டிகளை நடத்துகிற அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் பொறுப்பேற்றிருக்கும் துறை பற்றியும் குறித்திட வேண்டும்.
4. போட்டியில் பங்கேற்கிற குழுக்களை (Clubs) அகரவரிசைப்படுத்தி, போட்டியாளர்களின் பெயர்களையும் திரப்பிட வேண்டும்.
5. போட்டி நிகழ்ச்சிகள் வரிசையை (order of events). குறித்து, என்னென்ன நிகழ்ச்சிகள், எந்தெந்த நேரத்தில் நடைபெறும் என்பதைக் குறித்துக் காட்டுதல்.
6. ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியிலும் ஏற்படுத்தம் பட்டிருக்கும் முந்தைய சாதனைகள் (Records).
7. முழுமையாக நிரப்பு தற்குரிய வெற்றி எண் குறிப்பேடு.
போட்டி கிகழ்ச்சிகள் வரிசையை தயாரிக்கும் முறை
1. ஒட்டப் போட்டிகள் என்றால், தடைதாண்டும் போட்டி, விரைவோட்டம், நெடுந்துர ஓட்டங்கள், தொடரோட்டங்கள் என்று வரிசைப்படுத்தி, தயாரிக்க வேண்டும்.
2. ஒட்டப்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். நேரத்திலேயே, களப்போட்டிகளும் அடுத்தடுத்து நடத்திட வேண்டும்.
3. விரைவோட்டக்காரர்கள் எல்லோரும், தாண்டும் போட்டிகளில் பங்கு பெறுகின்றார்கள் என்பதால் இரும்புக்-