பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211

குண்டு எறியாளர்கள், தட்டெறிதல், சங்கிலிக் குண்டு வீசுதல் போன்ற நிகழ்ச்சிகளில், பங்குபெறுகின்றார்கள் என்பதால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒரே சமயத்திவ் நிகழ்ச்சிகள் வரிசையில் சேர்க்காமல், நேரம் கொடுத்து வரிசைப் படுத்த வேண்டும்.

4. கோலூன்றித்தாண்டும் போட்டி, உயரம் தாண்டுதல், தட்டெறிதல், வேலெறிதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து முடிய அதிக நேரம் பிடிக்கும் என்பதால், இத்தகைய நிகழ்ச்சிகளை, முன்கூட்டியே ஆரம்பித்து நடத்தப்படுவது போல, நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக கொள்ள வேண்டும்.

2. போட்டி நடைபெறும் போதுள்ள வேலைகள் (Meet Work)

1. போட்டியில் பங்கு பெறுகின்ற போட்டியாளர்கள் : நடத்துகின்ற அதிகாரிகள் அனைவரும், போட்டி தொடங்குகின்ற நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்த விட வேண்டும்.

2. அதிகாரிகளுக்குரிய அடையாள அட்டைகள், போட்டியைக் காட்டும் நிகழ்ச்சி நிரல் பிரதிகள், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான குறிப்பேடுகள், அனைத்தையும் கொடுத்திட வேண்டும்.

3. போட்டியாளர்களுக்குரிய எண்கள், (Numbers) : நிகழ்ச்சி நிரல் பிரதிகள், மற்றும் அவர்களுக்குரிய வழிகாட்டும் அறிவுரைக் குறிப்புகள் அனைத்தையும் தந்து விட வேண்டும்.

4. போட்டியாளர்கள் அணிவகுப்பு, உறுதி மொழி எடுத்தல் போன்றவற்றுடன் போட்டிகளைத் தொடங்கிட வேண்டும்.

5. நிகழ்ச்கி நிரல் வரிசைக்கு எற்ப, நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும்.