பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

முடிக்கிறதோ, அதுவே வென்றதாகும். இதற்கு தொடர் முறை (Follow on method) என்று பெயர்.

ஆ) தொடரோட்ட (Relay) போல, எதிரெதிரே மாணவர்களைப் பிரித்து நிற்கச் செய்து (100 மீட்டர் தாரம்). தறி ஓட்டம் போல. (Shuttle Relay) ஒடிடச் செய்தல். இதற்கு தறிமுறை (Shuttle method) என்று பெயர்.

இ) ஒவ்வொரு மாணவனும் குறிப்பிட்ட தூரத்தை (85 மீட்டர் தூரம்) ஒடச் செய்து, எந்தக் குழு குறைந்த நேரத்தில் மொத்தத்தில், ஒடி முடிக்கிறதோ, அந்தக் குழு வென்றதாக அறிவித்து, அதற்கான வெற்றி எண்களை அளிக்க வேண்டும். (5, 3, 2.) என்பது போல) இதற்கு குழுப் போட்டி முறை (Zonal method) என்று பெயர்.

கள நிகழ்ச்சிகள் நீளம் தாண்டுதல், தட்டெறிதல், இரும்புக்குண்டு போடுதல் போன்ற நிகழ்ச்சிகளில், குழுக்களைப் பங்கு பெறச் செய்து, அதிக தூரம் தாண்டுகிற, அதிக தூரம் எறிகிற குழுக்களுக்கு, வெற்றிப் பரிசினை அளிக்கலாம்.

களப் போட்டிகளும் இதே போல, தொடர் முறை, தறி முறை, குழுப் போட்டி முறை மூன்றையும் கடைப் பிடிக்கலாம்.

2. திறன் குறைந்தோர்க்கு, சலுகைப் போட்டிகள் திறன் குறைந்தோரையும், சலுகை முறையில் வாய்ப்பளித்து, சமமாகப் போட்டியிடுகின்ற முறை, இப்போட்டிகளில் பின்பற்றப்படுகிறது.

(உ. ம்) 100 மீட்டர் ஒட்டப் போட்டி என்றால், திறன் குறைந்தவர்களை, 10 அடி அல்லது 20 அடி தூரம்