219
5. என்னென்ன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதற்கேற்ப, ஆடுகளங்களைத்தயார் செய்து வைத்து, அதற்குரிய உதவிப் பொருட்களையும் நிறைவாக ஏற்பாடு செய்து வைத்தல் வேண்டும்.
6. பள்ளிகளிலிருந்து வரும் குழந்தைகளை, பல குழுக்களாகப் பிரித்து, அவர்கள் மாறி மாறிச் சென்று விளையாட்டில் பங்குபெறும் வழி முறைகளையும், அவர்களுக்குத் தெளிவாக விளக்குதல் வேண்டும்.
7. எல்லா குழுக்களுக்கும் சமவாய்ப்பு, நிறைவான வாய்ப்புகள் கிடைக்கும்படி, கவனமாகவும் பொறுப்பாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8. நிகழ்ச்சி நிரலில், சிறுசிறு விளையாட்டுகள, கோபுரப் பயிற்சிகள் லெசிம் போன்ற தாளலயப் பயிற்சிகள், சாகசச் செயல்கள் போன்ற மகிழ்ச்சிதரும் செயல்கள் இடம்பெறுகிற முறையில் இருக்கவேண்டும்.
9. நிகழ்ச்சிகளுக்கிடையே பானங்கள் வழங்குதல் நேரத்திற்கு உணவு கொடுத்தல் போன்றவற்றையும் சரியாகத் தருதல் வேண்டும்.
10. நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்ற பிறகு எல்லோரையும் ஒரிடத்தில் கூடச்செய்து, அவர்கள் தங்களது திறமைகளைக் காட்டுகிற சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் (ஆடல், பாடல், ஒப்பனை, மாறுவேடப்போட்டி, சிறு சிறு நாடகம் போன்றவை).
11. ஒவ்வொரு பள்ளியும் தமது குழந்தைகள் மூலம் அலை நிகழ்ச்சியை அளிக்கவும் வாய்ப்புக்கள் தரலாம்.