பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


224 4. எந்தெந்தக் குழு, என்னென்னப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதையும் சரியாக, தெளிவாக, உறுதி செய்ய வேண்டும். 5. தனித்தனியாக ஒவ்வொரு குழுவையும், அதற்குரிய கயிற்சிகளை அளித்து, பிறகு, எல்லா குழுக்களையும் ஒன்று சேர்த்து செய்கிற செயல் மாட்சிக்கு, பலமுறை ஒத்திகைகள் தேவை. 6. எந்த இடத்தில், செயல் மாட்சி நிகழ்ச்சி நடை பெறுமோ, அந்த இடத்திலேயே ஒத்திகை பார்ப்பதும் இல்லது. த 7. விழாவுக்கான சிறப்பு விருந்தினரையும் மு ன் கூட் டியே தெளிவு செய்து, அழைப்பிதழுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். 8. நுழைவு வாயில், வெளியே செல்லும் வழி போன்ற வற்றை அமைத்து, பார்வையாளர்கள் வசதியாக வந்து, இருந்து, போக ஏற்பாடு செய்வது நல்லது. செயல்மாட்சி நடைபெறும் நாளுக்கு முன்னதாக, மேலே கூறிய விவரங்களைக் கடைப்பிடித்த பிறகு, விழா நிகழ்ச்சிக்காக அதே நாளில் செய்ய வேண்டிய விஷயங்கள். 1. பார்வையாளர்களுக்காக இருக்கைகள். மேடை அலங்காரங்கள். 2. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குறியீடுகள். 3. நிகழ்ச்சிக்குத் தேவையான உதவி சாதனங்களைத் தயாராக சேகரித்து வைத்திருத்தல். 4. பங்கேற்கும் மாணவர்களுக்குரிய சீருடைகள்.