பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 .ே இந்திய நாட்டுத் தேகப்பயிற்சிகள் (தண்டால், ...க்கரனப் பயிற்சிகள். 7. ானாஸ்டிக்ஸ் பயிற்சிகள். 8. தற்காப்புக்கலைப் பயிற்சிகள். 9. ஒடுகளப்போட்டிகள், விளையாட்டுக்கள் பற்றி சித்தரிக்கும் சிலைக்காட்சி அமைப்பு (Tableaux) கண்காட்சி. அறிவு விளக்கமும், ஆர்வமும் அளிக்கக் கூடிய வகையில், கண்காட்சியை அமைக்க வேண்டும். விளையாட்டு, உடல் நலம், உடல் பயிற்சிகள் போன்ற தலைப்புக்களில், படங்கள், ஒவியங்கள், மாதிரிச்சீலைகள், கலரொட்டிகள் மூலமாக கண்காட்சியை அமைக்கலாம். பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளக்க, மாணவர் களை பயன்படுத்திக் கொள்ளலாம். கண்காட்சிக் கென்று தனி இடம் வேண்டும். வந்து போகும் வழிகளும் தாராளமாக இருக்கவேண்டும். கண்காட்சியை நடத்த, பொறுப்புள்ள நடுவரை தலைமையேற்கச் செய்து, அவர் தலைமையின் கீழ், ஒரு குழுவை அமைத்து விடுகிறபோது, கண்காட்சி சிறப்பு மிக்க தாக, பயனளிப்பதாக அமைக் ந1, பெருமை சேர்க்கும்.