பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22& 8. பஸ் அல்லது ரயில் மூலம் பயணம் செய்வது என்றால், அதற்குரிய சலுகைக் கட்டணம் போன்ற வற்றிற்கு மனு செய்து, ஏற்பாடு செய்துவிடல் வேண்டும். 4. சுற்றுலா செல்லும் இடங்களுக்கு, முன் கூட்டியே உரியவர்களுக்கு எழுதி, தங்கும் வசதி, உணவு முதலிய வற்றிற்கு ஏற்பாடுகளை செய்துவிட வேண்டும். 5. புறப்படும் நாள், நேரம், செல்லும் இடங்கள். ஒவ் வொரு இடத்திலிருந்தும் புறப்படும் நேரம். பயணத்திற் குரிய பஸ் அல்லது ரயில்.நேரம் முதலியவற்றைத் தயாரிக் கும் திகழ்ச்சிக் குறிப்புப் பட்டியலையும் தயாரித்து, அதன் படியே தாமதப்படுத்தாமல், ஒழுங்காக நடத்திட வேண்டும். 6. சுற்றுலாவுக்கு பணம் தான் முக்கியம். கையில் தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்திருப்பது, புதிய இடங் களில் ஏற்பட்டு விடுகிற எதிர்பாராத தொந்தரவுகளை சமாளிக்க உதவும். 7. புதிய இடங்களுக்குப் போவதால், பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்வது புத் திசாலித்தனமாகும். அதுபோலவே, செலவழிக்கும் பணத்திற்குரிய ரசீதுகளையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பண விஷயத்தில் மிகவும் பொறுப்பு அவசியம். 8. சுற்றுலா நேரத்தில், சுகவீனத்திற்கு பலர் ஆளா வது சகஜமே. பொதுவாக, உபயோகப்படுத்துகிற சில முக்கிய மருந்துகளையும், முதலுதவி தருகிற மருந்துகளை யும், வாங்கி வைத்திருப்பது நல்லது. 9. சுற்றுலா செல்பவர்கள் மகிழ்ச்சியான சூழ்நிலை யில் இருப்பது இயற்கைதான். இருந்தாலும் அவர்கள்