உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

இந்த நான்கையும் பயன்படுத்திக் கொள்ளும் வழி முறைகளை வகுத்து, ஒரு சூத்திரத்தை (Formulla) அளித்தார்.

இவர் கொடுத்துள்ள கணக்குப்படி, 17 ஆண்டுகள் வரை வயதையும்; 14 வயதுக்குப் பிறகு உயரத்தையும்; எல்லா வயது மட்டங்களிலும் உள்ள எடையையும் இனப்பிரிவுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்பது தான்.

(அ) கூட்டு=29 வயது + 6 உயரம் + எடை

17 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதையும் 17 ஆகவே, கொள்ள வேண்டும்.

(ஆ) கூட்டு=6 உயரம் + எடை

27 ஆண்டு வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் உடைய கல்லூரி மாணவர்களுக்கு இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

(இ) கூட்டு= 10 வயது + எடை

இந்த வாய்ப்பாட்டை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சிறார்களுக்கு உயரம் தேவையற்றதாகத் தோன்றுகிறது.

மூன்றாவது முறை

சூத்திரம் 11/2 உயரம் (அங்குலத்தில்) + எடை (பவுண்டில்).

இந்த சூத்திரத்தின்படி, வருகிற மொத்த எண்ணிக்கையைக் கொண்டு. நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.

1. மிக மூத்தோர் - 200க்கு மேல்
2. மூத்தோர் - 180க்கு மேல் 200க்கு கீழ்
3. இளையோர் - 160க்கும் 180க்கும் கீழ்
4. சிறுவர் - 180க்கும் கீழாக