பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

பெண்களுக்கான இனப்பிரிவு

பெண்கள் வளர்ச்சியைக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களையெல்லாம், ஒரே பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம்.

15 வயதுக்குட்பட்டவர்களை பிரித்து விடுகிற முறை.

1. கூட்டு = வயது + உயரம் + எடை

2. கூட்டு = வயது + உயரம் + எடை

முடிந்த ஆண்டுகளை வயதாகவும், அங்குலத்தில் உயரத்தையும், பவுண்டில் எடையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரிப்பதன் நோக்கம், மாணவர்களைப் போட்டியில் ஈடுபடுத்தி, திறமையை வளர்ப்பதற்கேயாகும்.

போட்டியில் பங்கு கொள்பவர்கள், தங்கள் திறமையைப் பற்றி தெரிந்து கொள்வதுடன், மற்றவர்கள் திறமைக்கும் மேலாகப் போட்டியிட்டு, போராடி வெற்றி பெறுகின்றார்கள்.

வெற்றிக்குப் பரிசும் பாராட்டும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன. புகழும் பெருமித சாதனையும் கிடைக்கின்றது.

பரிசுகளையும் பாராட்டுக்களையும் வழங்குவதில் ஒரு மரபை மேற்கொள்வது அவசியமாகின்றதல்லவா!

விலை மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தருகிற பொழுது, அவற்றை விற்றுவிடுகின்ற மனிதர்கள் நிறையது பேர்கன் உள்ளனர்.

ஆகவே, பரிசின் மதிப்பை பணம் கொண்டு அளிப்பதால், அப்படிப்பட்ட பரிசைத் தவிர்த்து, பிற்காலத்-