பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20. தேர்வு நெறிகளும் அளவு முறைகளும் (TESTS AND MEASUREMENTS; தேர்வு நெறிகளும், அளவு முறைகளும், மாணவர்களின் திறமை, தேர்ச்சிபற்றி, தெளிவாகத் தெரிந்து கொள்ள: உதவுகின்றன. தேர்வுகள் எல்லாம் மாணவர்களின் திறமைகள், வலிமை, நீடித்துழைக்கும் ஆற்றல், விளையாட்டு பற்றிய அறிவு, நடத்தை, பண்பாற்றல் பற்றி தெரிந்து கொள்ள உதவு கின்றன. அளவு முறைகள் எல்லாம், மாணவர்களின் உடல் அளவு, அமைப்பு, உயரம், எடை, உடல் இயங்கு ஆற்றல், சாதனை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள உதவுகின்றன. தேர்வும் அளவும் எதற்காக ? 1. மாணவர்களின் பலத்தையும் பலஹlனத்தையும் அறிந்துகொள்ள. 2. மாணவர்களை ஒரினப் பிரிவாகப்பிரித்துக் கொள்ள, 3. மாணவர்கள் தங்கள் திறமையைத் தெரிந்து கொள் வதுடன், மற்றவர்கள் திறமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, உயாத்திக்கொள்ள. 4. மாணவர்களின் திறமை வளர்ச்சியை மதிப்பீடு செய்ய.