பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


240 குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு, குறிப்பிட்ட சாதனை, அதற்கான வெற்றி எண்கள் என்று பட்டியல் போட்டுக் கொண்டு, மூன்று பிரிவுகளில் எதில் வெற்றி பெறுகின் றார்கள் என்பதைக் கணக்கிட்டு அறிதல் வேண்டும். ஆண்களுக்கான தேர்வு நிகழ்ச்சிகள்

5. தொங்கு கம்பியில் ஏறி இறங்குதல். ஒடி வந்து நீளம் தாண்டுதல். ஒடிவந்து உயரம் தாண்டுதல். 100 மீட்டர் ஒட்டம். கிரிக்கெட் பந்து எறிதல். இந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் சாதனையை சோதித் துப்பார்த்து, சாதனைக்கேற்ற மதிப்பெண்களை வழங்கி, அவர்கள் தரத்திற்கேற்ற இடங்களை வழங்கிட வேண்டும். மாணவர்களும் தேர்வில் பங்கேற்றலும் 1. மேற்காணும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கு முன்பாக, இந்நிகழ்ச்சிகளில் அவர்கள் பயிற்சிகளை செய்து பழகியிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், உடல் பதப் படுத்தும் பயிற்சிகளை செய்திருக்க வேண்டும். உரிய விளையாட்டுடையை அணிந்திருக்க வேண்டும். முன்கூட்டியே தெரிவித்திருந்து, அந்த நேர தில் தான் அவர்களை சோதனைக்கு ஆட்படுத்த வேண்டும். - மருத்துவ சோதனையில், தகுந்தவர் என்று அறிவிக்கப்பட்டவர்களே. இப் போட்டி நிகழ்ச்சி களில் பங்கு பெறலாம். இவ்வாறு உடற்கல்வியைக் கற்பித்தும் திறம் வளர்த் தும் பயன்பெற வாழ்த்துகிறோம் !