பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கற்பவர் கற்கத் தயார் நிலையில் இல்லை என்றால், அங்கே கற்றல் நடைபெறாது. கசப்பான உணர்வுகளே கால் பரப்பிக் கிடக்கும்.

நோய் வந்த போதும், உடல் உறுப்புக்கள் பழுதடைகிற போதும்; வீட்டில், சமுதாயத்தில் அவருக்கு சுமுக நிலை இல்லாத போதும், ஒருவாத கற்கும் மனநிலையில் தேக்கம் பிறக்கிறது. ஊக்கத்தையும் இழக்கிறது.

ஆகவே, கற்பவர் மனநிலை, உடல்நிலை, உற்சாக நிலை, இலட்சியநிலை இவைகளே கற்கத் தூண்டும்.

3. வாய்ப்புகள் வழங்கும் சூழ்நிலை (situation)

சுற்றுப்புற சூழ்நிலை போல, கற்றலுக்கும் உரிய சரியான சந்தர்ப்பங்கள், கற்றலில் வேகத்தையும், நல்ல தரத்தையும் வழங்குகிறது.

ஆகவே, ஆசிரியர்கள், மாணவர்கள் கற்பதற்குரிய நல்ல சூழ்நிலையை முதலில் உருவாக்கித் தரவேண்டும்.

வீட்டில், சமுதாய அமைப்பில், பள்ளிகளின் சுற்றுப் புறத்தில், புதிது புதிதாகக் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு. என்றாலும், சிறப்பாகக் கற்றுக் கொள்ளும் திறன், மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிற சூழ்நிலையைப் பொறுத்தும், அது வழங்குகிற வாய்ப்பைப் பொறுத்துமே அமைகிறது.

4. செயல்படும் விதமும் வேகமும் (Interaction)

மாணவர்களின் தேவைகளும், அவர்கள் கொண்டிருக்கும் இலட்சிய நோக்கும் ஏற்படுத்துகிற தூண்டுதல்களுக்கு