பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

அவசியத்தை அறிய நேர்கிறது. அறிவார்ந்த லட்சியங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே, இயற்கையோடு இயைந்த அறிவைப் பெற்றிட உதவும் சமுதாயத்தில், காணப்படும் சில துணைப் பொருட்களைக் காண்போம்.

1. அணைக்கட்டுகள் 2. பாலங்கள்
3. பொருட் காட்சி சாலை 4. தொழிற் சாலை
5. கலைக் காட்சியகம் 6. மீன் காட்சியகம்
7. மிருகக் காட்சி சாலை 8. கலங்கரை விளக்கம்
9. துறை முகம் 10. உடற்பயிற்சி கூடங்கள்
11. விளையாட்டுப் போட்டிகள் 12. பூங்காக்கள்
13. வரலாற்றுக் கட்டிடங்கள் 14. விமான நிலையங்கள்
15. அரசு பொது நிறுவனங்கள் 16. மின் நிலையங்கள்

இவற்றை நேரில் காணுகிற போது, ஏராளமான செய்திகளை மாணவர்களால் தாராளமாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.


2. கிளைப் பாடத் திட்ட செயல்கள்

பள்ளிகளில் மற்றும் பாட நிறுவனங்களில், பயிலும் மாணவர்களுக்கு, பல்வேறு விதமான விருப்புகள், ஆசைகள் உண்டு.

அவர்கள் ஆசை நிறைவேறவும், ஆர்வமுடன் பங்கு கொளளவும், பாடத் திட்டத்திற்கேற்ப, பல கிளைகள் அடங்கிய இயக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சான்றாக, தேசிய மாணவர் படை; சாரணர் இயக்கம்; முகாம் வாழ்க்கை இயக்கம் (Camping); நடந்து சென்று