பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. வகுப்பறை நிர்வாகம் (CLASS MANAGEMENT) வகுப்பும் தொகுப்பும் வகுப்பறை என்பது வெறுமனே ஒரு வெற்றிடமல்ல. அதில் உள்ளவை எல்லாம் உயிரற்ற பொருட்களுமல்ல. வகுப்பறை என்பது ஜீவனுள்ள இடம். துறு துறுப்பும், துடிப்பும், முனைப்பும் நிறைந்த மாணவர்கள் சூழ்ந்த குழாம் அது, அத்தகைய அறிவார்ந்த மாணவர்களை, அற்புதத் திறமையுடன் கையாண்டு, கல்வியின் நோக்கங்களையும், இலட்சியங்களையும் மாணவர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவதையே வகுப்பறை கிர்வாகம் என்று அழைக்கின்றனர். - இதை வகுப்பறை செயல் ஆட்சி என்றும் சிலர் கூறுவார்கள். கிர்வாக அனுகுமுறை. ஆசிரியரின் வகுப்பறை நிர்வாகத்திற்கு உதவுகின்ற, பொதுவான உகந்த சில குறிப்புக்களை நாம் இங்கே காண்போம். -3