பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


全6 இவ் வாறு மாணவர் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 6. குழு அமைப்பு வகுப்பில் அதிக எண்ணிக்கையில் வரும் மாணவர்களை, சிறு சிறு குழுக்களாகப் (Squad) பிரித்து, ஒவ்வொரு குழு வுக்கும் ஒரு குழுத் தலைவரை நியமித்து, குழுவின் முன்னே தலைவரை நிற்க வைத்து, அவர்கள் மூலம் வருகையைப் பதிவு செய்வதும் சிறப்பான முறையாகும். வகுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவும், வகுப்பு முடிந்து கலைவதற்கு முன்னதாகவும், பெயர்ப் பட்டியலை சரிபார்ப்பது நல்லது, ஏனென்றால், இடைப்பட்ட நேரத்தில், சிலர் நழுவிப் போவதும் உண்டு. எந்த முறையைப் பின்பற்றினாலும், நேரம் வீணாகிப் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 7. பாதுகாப்பு நடவடிக்கைகள் உடற்பயிற்சிகள் , விளையாட்டுக்கள் என்கிறபோது, அவற்றிற்குள்ளேசில ஆபத்துக்கள் ஏற்படுவதற்கும் ஏதுக்கள் உண்டு. ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் என்பதில், கீழே தவறிவிழ வாய்ப்பு உண்டு. மெத்தைகள் வைத்து, கற்பிக்கும் போது, பாதுகாப்பு உண்டு. கபாடி போன்று உடலால் மோதிக் கொள்ளும் ஆட்டங் களும் உண்டு. அவற்றில் விதிகளை செம்மையாக சொல்லிக் கொடுத்து விட்டால், விபத்துக்கள் நேராமல் பாதுகாத்துக் காள்ளலாம்.