பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 0. 11 : 49 வகுப்பில் உள்ள மாணவர்களின் வயது, இனம், தேவைகள், ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள், திறமை கள் இவைகளுக்கேற்ப பாடங்களைத் தேர்வு செய்து, கற்பிக்கும் முறையைக் கையாள வேண்டும். பாடங்களைக் கற்பிக்கிற போது, தெளிவான கற்பிக்கும் முறை மட்டும் போதாது. கணிரென்ற குரலும், சரியான உச்சரிப்பும். தெளிவான பேச்சும் வேண்டும். சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வர, கலைந்து: செல்ல என்பதில் கட்டுப்பாடான கவனம் செலுத் திட வேண்டும். மாணவர்களின் அபிப்ராயத்தையும் அறிந்து, செவிசாய்த்து, நல்லதென்று பட்டால், நடை முறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்குக் கீழ்ப்படிதலையும், சுயகட்டுப் பாட்டையும், பண்பான செயல்முறைகளையும் வளர்க்க ஆவன செய்ய வேண்டும். மாணவர்கள் மனம் புண்படும்படி பேசுவதை, முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் குறைகளை, நாசூக்காக விளக்கி நிவர்த்திப்பதும் திறமைகளை மற்றவர்களும் அறியும்படி, பாராட்ட வேண்டும்.