உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஆசிரியரும் பாடம் தயார் செய்தலும்.

பாடத் திட்டத்தைத் தயார் செய்கிற ஆசிரியருக்கு

1. கொடுக்கப் பட்டிருக்கும் குறிப்பிட்ட வகுப்பு நேரத்திற்குள், பாடத்தைப் போதித்து, பக்குவமாக இலட்சியத்தை அடையும் வழிகளை சுலபமாகப் பெறமுடிகிறது.

2. ஒவ்வொரு மாணவரையும் பாடம் பதமாகச் சென்றடையக் கூடிய பாங்கான முறையை, பகுத்துப் பெற முடிகிறது.

3. எந்த மாதிரியான கற்பிக்கும் முறை கையாளப்படுகிறது என்பதை திட்டவட்டமாக முடிவெடுத்து, செயல்பட, சிறப்பு பெற உதவுகிறது.

இவ்வாறு நாம் ஆசிரியரின் பொறுப்பை அறிந்து கொள்வோமானால், பாடம் தயார் செய்கின்றதன் பயன்களையும் என்னவென்று புரிந்து கொள்ள, நமக்கு உதவகின்ற குறிப்புக்களையும் தெரிந்து கொள்வோம்.


பாடம் தயார் செய்தால் ஏற்படும் பயன்கள்.

1. குறிப்பிட்ட பாடத்தை, சிறப்பாக போதிக்க உதவுகிறது.

2. நடந்த பழைய பாடத்திற்கும், நடக்கவிருக்கும் புதியபாடத்திற்கும் தொடர்பு தரும் பாலமாக, அமைந்து விடுகிறது.

3. பாடப் பொருளைக் கையாளுதல், தேவையான துணைப் பொருட்களைத் தேடித் தயார் செய்தல்.