உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

செயல்களைத் திட்டமிடுதல். இவற்றிற்குத் துணைபுரிகிறது.

4. விருப்பமான கற்பிக்கும் முறை எது என்பதைத் தேர்ந்தெடுக்கும் ஞானத்தை ஆசிரியருக்கு வழங்குகிறது.

5. பாடத்தின் முழுமையை, நுணுக்கமாகப் புரிந்து கொள்ளச் செய்கிறது.

6. போதிக்கும்பொழுது ஏற்படுகிற விளைவுகளை, விவேகத்துடன் சந்திக்கவும், சிந்திக்கவும், மேம்படுத்தவும் தூண்டுகிறது.

7. பாடத்தை சிறப்பாகப் போதிக்க, வினாக்களை எழுப்பவும், வரைபடங்களைத் தயாரிக்கவும் கூடிய வல்லமையை விளைவிக்கிறது.

8. பாடங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு (unity) போதிக்க உதவுகிறது.

9. குறிப்பிட்ட பொறுப்பான போதனா முறையை உறுதிப்படுத்துகிறது.

10. மாணவர்களுக்குள்ள திறமைகளின் வேற்றுமையை அறிந்து, அதற்கேற்ப அனுசரித்துப் போதிக்கும் பேராற்றலைக் கொடுக்கிறது.

11. தேவையானபொழுது, தேவைகளை திருப்தியாகத் தீர்த்து வைக்கவும் உதவுகிறது.

12. ஆசிரியருக்கு கற்பனா சக்தியை அளிப்பதுடன், போதிக்கும்பொழுது, ஒரு சுதந்திரமான உணர்வையும் மிகுதிப்படுத்துகிறது.