பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


63 4. கைகளை முழங்கால்கள் மீது வைத்து ஆசன இருக்கையில் இருத்தல். சரியான இருக்கை வருவதற்கு, சரியாகக் கற்பித்தபின், மீண்டும், ஒற்றை அணி வரிசைக்கு மாணவர்களை வரச் செய்யவும். 5. புத்துணர்வூட்டும் விளையாட்டு இந்த விளையாட்டுக்கு 18 நிமிடம் ஒதுக்கிக் கொள்ளலாம். சான்றுக்கு ஒரு ஆட்டம். சிலை ஆட்டம் ஒரு குறிப்பிட்ட எல்லையை நிர்ணயித்துக் கொண்டு, ஒடிப்பிடிக்க (it) ஒருவரை நியமித்து, மற்ற மாணவர்களை ஒடச் செய்ய வேண்டும். விரட்டுகிற மாணவர், தம்மைத் தொட - வரும்போது, தொடப்படாமல் ஒட வேண்டும். இனி ஒட முடியாது என்கிற போது, சிலைபோல அசையாமல் நின்றுவிட வேண்டும். அவர் அசையாத வரை பத்திரமாக இருக்கிறார். அசைந்தால் தொடப்பட தொடப்பட்டவர் விரட்டுபவராக மாற, ஆட்டம் தொடரும். குறிப்பு, இந்த, ஆட்டத்திற்கான விதிமுறைகளை, முன்னதாகவே மாணவர்களுக்கு விளக்க வேண்டும். நேரம் இருந்தால், பல ஆட்டங்களையும் ஆடச் செய்யலாம். விளையாட்டு முடிந்த பிறகு, மாணவர்களை அணியாக திற்கச்செய்து, வகுப்பைக் கலைத்திட (Dismiss) வேண்டும்.