பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


65 4. அடிப்படை நுணுக்கத்தைப் பழக்கி பயிற்சியளித்தல் 5. மாணவர்களுக்கிடையே போட்டி வைத்தல் 6. வகுப்பைக் கலைத்துப் போகச் செய்தல் 1. ஒரு விளையாட்டுக்கு மாதிரிப் பாடம். வகுப்பு. 8 நேரம்: 45 நிமிடங்கள், விளையாட்டு: கைப்பந்தாட்டம் துணைப்பொருட்கள்: 6, பந்துகள், வலை, அளவிட்ட ஆடுகளம். 1. வருகையும் வருகைப்பதிவும் வகுப்புக்கு வந்திருக்கும் மாணவர்களை ஒர ணி முறையில் நிற்கவைத்து, வருகையைப் பதிவு செய்தல் (2 நிமிடம்) 2. பதப்படுத்தும் பொருத்தமான உடற்பயிற்சிகள் நின்ற இடத்தில் ஒடுதல் ; மெதுவாக ஒடி பிறகு விரைவாக ஒடுதல், கைகளை முன்னும் பின்னும், பக்க வாட்டிலும் வீசுதல்; கால்களை முன்னும் பின்னுமாக பக்க வாட்டிலும் சுழற்றி இயக்குதல்; இடுப்பை முன்னும், பின்னும் பக்கவாட்டிலும் வளைத்துத் திருப்புதல். பிறகு, கைப்பந்தாட்டத்திற்குத் தேவையான பயிற்சிகளைத் தருதல். 3. கைப்பந்தாட்டத்தில் ஒரு திறனைக் கற்றுத் தருதல். (இருகையால் (Underhand Pass) கீழ்ப்புறமாக பந்தை. எடுத்தல்) 8 நிமிடங்களில் கற்பிக்கவும்.