பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

மாணவர்கள் தங்கள் சந்தேகத்தைக் கேட்கவும், ஆசிரியர் தீர்த்து வைக்கவும் கூடிய சந்தர்ப்பத்தை, இந்த கற்பிக்கும் முறை கொடுத்து உதவுகிறது.

இந்த முறையில் செயல் வாய்ப்பு இல்லையென்றாலும், மாணவர்களை உற்சாகமாகப் பங்கு பெற உதவுகிறது. சுய வெளிப்பாட்டுக்கு உற்சாகம் அளிக்கிறது.

3. செயல் விளக்க முறை (Demonstration method)

ஆசிரியர் சுருக்கமாக சொல் விளக்கத்துடன், பயிற்சிகளை சொல்லியபடி செய்து காட்டுவார். ஆசிரியரின் செயல் விளக்கத்தை அறிந்து கொண்டு, மாணவர்களும் செய்து பழகுவர்.

செயல் விளக்கமுறைதான் சிறப்பான கற்பிக்கும் முறை என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

செயல்விளக்கமுறை எப்படி அமைய வேண்டும் என்று பார்ப்போம்.

செயல்விளக்கமானது சரியாகவும் தவறில்லாமலும், இருக்க வேண்டும் சொல்லிய வண்ணமே செய்து காட்ட வேண்டும்.

செயல் விளக்கம் முதலில் மெதுவாக அமைந்து, பிறகு படிப்படியாக வேகம் பெற வேண்டும்:

முக்கியமான திறன் நுணுக்கங்களை, தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கொண்டு கற்பிக்கிற போது, அவர்களும் பயன் பெறுகின்றார்கள். பார்க்கின்றவர்களுக்கும் அனுபவமும், தெளிவும் பிறக்கிறது.

-5