பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

6. விருப்ப முறை (At will Method)

இந்தப் போதனா முறையில், அவரவர் விருப்பத்திற்கேற்ப பயிற்சி செய்யும்படி, மாணவர்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகின்றார்கள்.

எந்தப் பயிற்சியில் அவர்களுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அவற்றை தாராளமாக, தன்னிச்சையாக செய்து, தேர்ச்சி பெறுகின்றார்கள்.

இந்த முறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், மாறாத தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கிற வாய்ப்புக்களை வழங்குகிறது.

7. தாளலய பயிற்சி முறை (Set drill Method)

உடற்கல்வியில் உள்ள சிறப்பான பயிற்சி முறைகளை, தாளலய நயத்துடன் கற்பிக்கின்ற முறையாகும்.

லெசிம், டம்பெல்ஸ், பெரும் கழிகள், குறுந்தடிகள் கொண்டு செய்யும் பயிற்சிகளுடன், வெறுங்கையுடன் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் தாளத்துடன், லயம் மாறாகத் தொடர்ந்து செய்வது இப்பயிற்சி முறையின் முக்கியத்துவமாகும்.

தாளலயத்துடன் செய்கிறபோது, மாணவர்களுக்கு இது பேரார்வத்தையும், பெரும் மனக்கிளர்ச்சியையும் பெருக்கெடுத்தோடவிடுகிறது.

8. முழுமையான முறை (Whole Method)

ஒரு பயிற்சியைப் பாகம் பாகமாகப் பிரித்துக் கற்பிக்காமல், முழுமையாகவே, அதைக் கற்பித்துக் கொடுக்கும் முறைக்கே, முழுமையான முறை என்று பெயர்.