பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

4. பார்த்துச் செய்யும் முறை
(Imitation method)

இதுவும் ஒருவகையில், செயல்விளக்கம் போன்றதுதான்.

குறிப்பிட்டப் பயிற்சியானது, ஏற்கனவே மாணவர்களுக்கு தெரிந்ததாக இருந்தால்; அல்லது எளிதில் செய்யக் கூடிய பயிற்சியாக இருந்தால், ஆசிரியர் செய்யும் போழுதே, பார்த்து, மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.

ஆசிரியரைப் பின்பற்றி, பார்த்தது பார்த்தபடியே செய்யும் பக்குவம் தர, இந்த முறை இனிதாக உதவுகிறது.

பார்த்துச் செய்யும் முறை, செயல் விளக்க முறைக்கு உதவுவதாகவும் இருக்கிறது.

5. நாடக முறை
(Dramatization method)

இது ஒரு புத்துணர்வூட்டும் போதிக்கும் முறையாகும்.

பலவகைப்பட்ட மிருகங்கள், பறவைகள், வாகனங்கள் போன்று நடந்து காட்டுதல். பறவைகள் போல் செய்து காட்டுதல். ஊர்திகள் போல் ஊர்ந்து காட்டுதல்.

இவற்றைப் போலவேகதை விளையாட்டுக்களும், பாடி விளையாடும் விளையாட்டுக்களும் உண்டு. கதையை நடித்துக்காட்டி மாணவர்கள் விளையாடுவர்.

நாடக முறையானது, குழந்தைகளுக்கு ஏற்றது. இந்த முறை, மாணவர்களின் கற்பனைத் திறனையும்டி புனைவாற்றலையும் வளர்க்கும் வாய்ப்பளிக்கிறது.