பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

காட்டி, விளக்கி, தேர்ச்சி பெற்றவர்களின் நுணுக்கத்திறன், (Tactics) நுண் ஆட்சி முறை, சிறந்த அணுகு முறைகள் (Techniques) போன்றவற்றை நேர்முகமாகக் காட்டிக் கூறுகிறபோது, மாணவர்களுக்கு உற்சாகம் பெருகுவதுடன், கற்கும் திறனும் கூடிப் பெருகிக் கொள்கிறது.

இத்தகைய வாய்ப்புக்கள் இல்லாதபோது, மேற்கூறிய காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைக் காட்டி, திரும்பத் திரும்பக் காணச் செய்கிறபோது, அறிவும் விரிவாக்கம் கொள்கிறது.

சியோல் ஒலிம்பிக் பந்தயத்தில், பெண்கள் 100, 200 மீட்டர் ஓட்டங்களில் வென்று உலக சாதனை புரிந்த புளோரன்ஸ் கிரிபத் ஜாய்னர், சிறந்த ஒட்ட வீரரான பென் ஜான்சன் ஒடிப் பழகிய திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து தேர்ச்சி பெற்றார் என்ற வரலாறு, இந்த மாட்சிமை மிகு கண்காட்சி முறைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

நம்மவர்களும் இந்த முறையைப் பின்பற்றிப் பெரும் பயனடையலாம்.