பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

கைகளை மேற்புறமாக உயர்த்து என்பது ஆசிரியர் கட்டளையிட வேண்டிய முறை

1. கைகளை மேற்புறமாக -சத்தமாக அதிகாரத்துடன் கட்டளையிடுதல்.

2. பிறகு சிறிது நேரம் தந்துவிட்டு

3. உயர்த்து என்பதைக் கட்டளையிடுதல்.

செய்ய வேண்டிய பயிற்சியினை முதல் நிலையாகக் கொண்டு விளக்கி, இடையில் நிறுத்தி நேரம் தந்து, இறுதியாக உரத்த குரலில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுவதுதான் சிறந்த கட்டளை கொடுக்கும் முறையாகும்.

2. தொடர்ந்து செய்யும் கட்டளை முறை
(Rhythmic Command)

கற்றுக் கொண்ட ஒரு பயிற்சியை, மாணவர்கள் தொடர்ந்து, திரும்பத் திரும்ப, தாளலயத்துடன் செய்ய வேண்டியிருக்கிற பொழுது, அதற்காக உதவுவது தான். இந்தக் கட்டளை முறை.

இந்தக் கட்டளையையும் 5 நிலையில் கூற வேண்டும்.

1. விளக்கம் (Explanation)

2. நேரம் தருதல் (Pause)

3. செயலைத் தொடங்குதல் (Execution)

4. தொடர்ந்து தாளலயத்தில் எண்ணுதல் (Rhythmic Counting)

5. பயிற்சியை நிறுத்தல் (Halting)

உதாரணத்திற்கு ஒரு பயிற்சியைப் பார்ப்போம்.