பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


85 8. தற்காப்புக் கலைகள் (Defensive Arts) 9. ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகள் (Track and Field events) 10. நீச்சல் போட்டி நிகழ்ச்சிகள் (Swimming) இத்தகைய பயிற்சிகளை எப்படிப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற முறைகளை அறிந்து கொள்ளுமுன், கற்பிக்க வசதியாக, மாணவர்களை எப்படிப் பிரிக்க வேண்டும், நிறுத்தி வைக்க வேண்டும் என்ற முறைகளை முதலில் தெரிந்து கொள்வோம். ஒழுங்குபடுத்தும் பயிற்சிகளுக்கான வகுப்பு அணி முறை. வகுப்பு மாணவர்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்தி (Single line) வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான கட்டளைகள் 1. மாணவர்களே ! ஒரு வரிசையில் நில்லுங்கள் (In a line - class - Fall in) இந்தக் கட்டளையைத் தொடர்ந்து, மாணவர்களில் குள்ளமானவர் வலப்புறம் இருப்பது போல் நிற்க, அடுத்து உயரமானவர்கள் என்ற நிலையில் ஓரணிவரிசையில் நிற்க வேண்டும். 2. நேரே - fisio (Atten-Tion) கைகள் பக்கவாட்டில் உடலுடன் ஒட்டியபடி இருக்க, கால்கள் இரண்டையும் இணைத்தாற்போல் வைத்து, நிமிர்ந்து நிற்கச் செய்யவும். அசையாமல் நிற்க வேண்டும்.