பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87 2. GbGg – fisio (Atten - Tion) மாணவர்கள் கால்களை சேர்த்து, நிமிர்ந்து, கைகள் உடலோடு ஒட்டியிருக்க, விரைப்பாக நிற்க வேண்டும். 3. (spsi Gorgööð - of Qasis (Forward - Dress) முதல் மாணவன் நிமிர்ந்து அசையாமல் நிற்க, அவன் பின்னே உள்ளவர்கள் தங்கள் வலக்கையை நேராக, முன்னோக்கித் துக்கி, தங்கள் அணியின் அடுக்கை சீர் செய்ய வேண்டும். அவர்கள் வலக் கையை, முன்புறமாக உயர்த்தியே இருக்க வேண்டும். 4. கைகளைத் - தாழ்த்து (Arms - Sink) கட்டளைக்குப் பிறகு, கையைத் தொங்க விட்டு விட்டு, மீண்டும் நிமிர்ந்த நிலையிலே, விறைப்பாகவே நிற்க வேண்டும். இனி வகுப்பை பயிற்சிக்கு ஏற்ப வசதியாக நிறுத்து வதற்காகக் கொண்டு வருகிற முறையைக் காண்போம். இதை அணி திறப்பு முறை என்பார்கள். அணி திறப்பு முறை (Open Order Formation) மாணவர்கள் ஒரு நேர்க் கோட்டு வரிசையில் இருக்கும் போது, பின்பற்றும் கட்டளை முறை இங்கே கொடுக்கப் பட்டிருக்கிறது. 1. ஒற்றை நேர்க் கோட்டு அணி - அதன் திறப்பு முறை 1. வலப்புறமிருந்து மூன்று மூன்றாக ... எண்ணு (From the Right in Threes ...... Count) மாணவர்கள் வலது புறத்தின் ஆரம்பத்திலிருந்து, 1, 2, 3, 1, 2, 3 என்று எண்ணிக் கொண்டே வரவேண்டும்