பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. 4. 97 குப்புறப் படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு செய்யும் ஆசனங்கள். ஆசனத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு சில குறிப்புக்கள் 1. குறைந்த அளவு ஆடையுடன், ஆசனம் செய்ய வேண்டும். வெறுந்தரையில் ஆசனம் Թտաաոած, ஏதாவது ஒரு விரிப்பின் மேல் செய்வது நல்லது. - ஆசனம் செய்யும் போது, வயிறு காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலையிலோ அல்லது மாலைப்பொழுதிலோ ஆசனம் செய்வது நல்லது. மாணவர்களுக்கு ஆசனம் செய்ய இடம் இருப்பது போல, வட்ட வடிவ அமைப்பில் அல்லது அரை வட்ட அமைப்பில் மாணவர்களை இருத்திட வேண்டும். கற்றுத்தரப் போகிற ஆசனத்தின் பெயரை முதலில் கூறி, அதன் அமைப்பு, செய்தால் கிடைக்கும் பயன் முதலியவற்றை விளக்கி, அதனை எண்ணிக்கை முறையில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை, ஆசிரியர் செயல் விளக்கத்துடன் செய்து காட்ட வேண்டும். பிறகு மாணவர்களை, ஒவ்வொரு எண்ணிக்கை யிலும் செய்திடப் பணித்து, குறைகளை நிவர்த்தித்து, பிறகு தொடர்ச்சியாகச் செய்யுமாறு கற்றுத்தர வேண்டும்.