பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல்நலக்கலவி 1. நோய் என்றால் என்ன? நோய் என்றால் துன்பம் எண்று பொருள். எப்பொழுதும் இருப்பதுபோல் இல்லாமல், உடலுக்கு ஏற்படுகிற ஒரு சுகமும் இதமும் அற்ற நிலைய்ை நோய் என்கிறோம். அதாவது உடலின் உறுப்புக்கள் தங்களின் பணியை சிறப்பாகத் தொடரமுடியாமல் தொய்வு பெற்றிருக்கும் நிலையே நோய் என்பதாகும். 2. உணவு பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் யாவை? 2 ujlir (Vita) என்று அழைக்கப்படுகின்ற உன்னதமான பெருமையை உடைய உணவு சத்தாகிய விட்டமின்கள், உடலில் பற்றாக்குறையாக இருக்கும் போது மாலை நேரக்குருடு எலும்பு நோய் (ரிக்கட்ஸ்) தோல் வியாதியான சொறி, நோய் (ஸ்கர்வி) பெரிபெரி என்கிற திமிர் நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. 3. பிராணவாயு நமக்கு எப்படி உதவுகிறது? காற்று நமக்கு பல வழிகளிலும் உதவுகிறது. நைட்ரஜன். ஆக்சிஜன், கரியமில வாயு, நீராவி போன்ற ஆவிகளினால் காற்று உருவாகியிருக்கிறது. [ J© . ஆவிகளினால் (Gas) உருவாகியிருக்கிறது. அது மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் மிருகங்களுக்கும் உயிர்க் காற்றாக விளங்குகிறது - உலகில் நடமாடுகின்ற உயிரினங்கள் எல்லாம். அவைகள் உயிர் வாழ்கிற வரையிலும் சுவாசித்துக் கொண்டே யிருக்கின்றன. மனிதர்களாகிய நாம் காற்றை உள்ளே இழுத்து சுவாசிக்கும்போது இரத்தத்தந்துகிகள். துரையீரலுக்கு வருகிற காற்றில் உள்ள உயிர்காற்றை இழுத்துக் கொள்கின்றன. இரத்தத் தந்துகிகள் மூலம் எடுக்கப்பட்ட காற்றானது உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. உயிர்க் காற்றானது Զ-65ծT35XՋք எரித்து சக்தியை உருவாக்கப்பயன்படுகிறது. ஆகவே பிராணவாயு என்கிற உயிர்காற்று நமக்கு மிகவும் உயிர் மூச்சாக இருந்து உதவுகிறது. 1. ஒரு நோயாளி பிறருக்கு எப்படி சுமையாக மாறுகிறான்? நோய்க்கு ஆளானவன் மனிதன் என்று அழைக்கப்படாமல். நோயாளி என்றே அழைக்கப்படுகிறான். அவன் தன்னைத் தானே வருத்திக் கொண்டு. தனக்கு உதவி செய்ய பலரையும் துணையாக வைத்துக் கொள்கிறான். மற்றவர்களின் நேரம் வேலை பணம் 5