பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. நோய்களை எவ்வாறு தடுத்துக் கட்டுப்படுத்தலாம்? - 1. சுத்தமான காற்று. 2. சூரிய ஒளி 3 பாதுகாக்கப்பட்ட குடிநீர் சத்துணவு. 5. சுற்றுப்புற சுகாதார சூழ்நிலையும் பழக்கவழக்கங்களும் 6, உடற்பயிற்சிகள் 7. ஒய்வு, உல்லாசமாய் பொழுது போக்கும் விளையாட்டுகள். நல்ல துக்கம், போன்றவை நோய்வராமல் காப்பதுடன் நோய் வந்தாலும் கட்டுப்படுத்தி. தடுத்து, நோயின்றி. வாழ உதவுபவைகளாகும். 14. முதலுதவி என்றால் என்ன? - விபத்து ஏற்பட்டவுடன், தேவையான பொருத்தமான மருத்துவ உதவி கிடைப்பதற்கு முன்பாக செய்யப்படுகின்ற சிறு உதவிக்கே முதலுதவி என்று பெயர். 15. விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன? - அறியாமை, சரிவர யோசிக்காமல் செயல்படுதல், ஏட்டிக்குப் போட்டியாக செய்யமுற்படுதல். அலட்சியப் போக்கு. தற்பெருமை, அவசரப்பட்டு எதையும் செய்தல் போன்ற காரியங்களால்தான். விபத்துக்கள் ஏற்படுகின்றன. 16. வீட்டில் நடக்கின்ற விபத்துக்கள் யாவை? தீவிபத்து. இடறி விழுதல், காயங்கள். விஷப் பொருட்கள். மூச்சுத் திணறல் போன்ற விபத்துக்கள் பொதுவாக வீட்டில் நடக்கின்றன. - - 17. பள்ளியில் பத்திரமாக இருக்கும் சில விதிமுறைகளைக் கூறுக. 1. முள்வேலி, முட்கள் புதர்கள், மேடு பள்ளங்கள், கற்குவியல்கள் போன்ற பகுதிகளை. விளையாட்டிடமாக நினைத்து மாணவ மாணவியர் விளையாடக் கூடாது. 2. முரட்டுத்தனமாக அங்குமிங்கம் ஒடி மற்ற மாணவர்களுடன் மோதி விளையாடக் கூடாது தாண்டுவதற்க அல்லது எறிவதற்கு அல்லது ஒடுவதற்கு முன்பாக, உடலை பதப்படுத்துகின்ற பயிற்சிகளை கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையேல் தசைச் சுளுக் தசைப்பிடிப்பு போன்ற ஆபத்துகள் ஏற்படக் கூடும். 4. வகுப்பறையில் உள்ள மேஜைகள், பெஞ்சுகள், நாற்காலி போன்ற பொருட்களை தாண்டி விளையாட முயலக் கூடாது. 5. மற்றவர்களை முரட்டுத் தனமாகத் தள்ளி விளையாடக் கூடாது. கதவுகள் ஜன்னல்களை வேகமாகத் தள்ளி, சாத்தக் கூடாது. 6. பரிசோதனைக் கூடதத்தில், பரிசோதனைகள் செய்கிற போது, பொறுப்பான ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரிலே தான் செய்ய வேண்டும். தன்னிச்சையாக சோதனைகளைச் செய்யக் கூடாது.