பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சோதனைக் கூடத்திலிருந்து வெளி வந்ததும் சோப் போட்டு கைகளை கழுவிய பிறகு தான் சாப்பிடவேண்டும். m 18. சுவாச மண்டலம் பற்றி சிறு குறிப்பு வரைக? - உயிர் வாழ்வன யாவும். சுவாசித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை, இந்த சுவாசிக்கும் வேலை, தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சுவாசிக்காமல் எந்த ஜீவராசியும் உயிர் வாழ்வதில்லை. உள்ளே இருக்கும் கரியமல வாயுவை வெளியே அனுப்பி விட்டு, வெளியில் இருத்து இழுக்கும் காற்றில் பிராண வாயுவைப் பெற முயற்சிக்கும் வேலையே சுவாசம் என்று அழைக்கப்படுகிறது. நுரையீரல்களில்தான் காற்றுப் பரிமாற்றம் ஏற்படுகிறது. காற்றும் பாதைகளின் வழியாகத் தான் காற்று நுரையீரல்களக்குப் போய் திரும்புகிறது. சுவாச வேலையானது மூளையால் கட்டுப் படுத்தப்படுகிறது. -