பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்கிகளைத் தொட்ட உடனேயே, பந்து எல்லைக்கு வெளியே சென்றதாகக் கருதப்படும். 18. தவறு என்றால் என்ன? தவறுகள் எத்தனை வகைப்படும்? விதியை மீறுவது என்பது தவறாகும். தவறுகள் எல்லாம் தனியார் தவறு, தனி நிலைத்தவறு என்று 2 வகைப்படும். 19. தனியார் தவறு என்றால் என்ன? (Personal Foul) ஒரு ஆட்டக்காரர் எதிராளிமேல் இழைக்கின்ற தவறுகள் அதாவது எதிராளியைக் கட்டிப்பிடித்தல், மோதுதல், தள்ளுதல், இடித்தல், காலை வாரிவிடுதல் போன்ற குற்றங்களை செய்வதும், பண்பில்லாமல் நடந்து கொள்வதும் போன்ற தவறுகள், தனியார் தவறு என்று அழைக்கப்படுகிறது. 20. ஒரு ஆட்டக்காரர் எப்பொழுது ஆட்டமிழக்கிறார்? ஒரு ஆட்டக்காரர் 5 தவறுகள் செய்யும் போது, ஆட்டத்திலிருந் ای வெளியேற்றப்படுகிறார். 21. தனியார் தவறு எப்படி தண்டிக்கப்படுகிறது? ஒரு ஆட்டக்காரர் தவறிழைத்தவுடன், நடுவர் அவரது எண்ணை, வெற்றி எண் கணக்கரிடம் சுட்டிக் காட்டுகிறார். தவறை சுட்டிக்காட்டிய உடனே, தவறிழைத்தவர், தன் ஒரு கையை தலைக்கு மேலே உயர்த்திக் காட்டி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும். அப்படி செய்யத் தவறினால், அது தனி நிலைத்தவறாகக் கருதப்படும். 22. தனி நிலைத் தவறு என்றால் என்ன? Technical Foul) கீழ்க் காணும் தவறான நடத்தைகள் எல்லாம், தனி நிலைத் தவறுகளாகக் கருதப்படுகின்றன. *. 1. பண்பற்ற முறையில் நடத்தல், தந்திரங்களைக் கையாளு தல். 2. கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல், 3. எதிராட்டக் காரர்களுக்குத் தீங்கிழைத்தல், தொந்தரவு தருதல் 4 ஆட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தல், நடுவரை அவமதித்தல் 23. தனி நிலைத் தவறுக்கான தண்டனையாது? தனி நிலைத் தவறிழைத்தவரின் எதிரணி ஆட்டக்காரர் ஒருவருக்கு 2 தனி எறிகள் எறிய வாய்ப்பு கொடுக்கப்படும். 27