பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடந்து (வலையின் ஓரமாக) முன் பக்கம் போய் நிற்கக் கூடாது. 2. பின் வரிசை ஆட்டக்காரர்கள் தடுப்பதில் (Blocking) பங்கு பெற முடியாது. 3. அவர்கள் பந்தைத் தாக்கி அடுசிற காரியத்தையும் செய்ய முடியாது. இந்த விதிகலை மறினால், தவறாகக் கருதப்படும்.

10. கைப்பந்தாட்டத்தில் பந்தை விளையாடுகிற முறைகள் யாவை?

1. இடுப்புக்கு மேலே பந்து உடம்பில் படும்படி விளையாடலாம். 2. பந்து கையில் தேங்கி நிற்காதவாறு உடனே ஆடி அனுப்ப வேண்டும். 3. ஒவ்வொரு குழுவும் 3 முறை பந்தை விளையாடி எதிர்குழுவிற்கு அனுப்ப அனுமதி உண்டு. ஒரு ஆட்டக்காரரே தொடர்ந்து 2 முறை பந்தை ஆடிட அனுமதி இல்லை. 5. வலைக்கு மேலாகவே பந்தை விளையாடி அனுப்ப வேண்டும். 6. எல்லைக் கோட்டிற்கும். வெளியே சென்றும், பந்தை எதிர்க்குழுவிற்கு அனுப்பலாம்.

11. சர்வீஸ் என்றால் என்ன? விளக்குக?

1. விளையாட்டை தொடங்கும். வாய்ப்பை சர்வீஸ் கொடுக்கிறது. 2. சர்வீஸ் பகுதியில் இருந்து தான் சர்வீஸ் போட வேண்டும். 3. நடுவரின் விசிலுக்குப் பிறகு 5 நொடிகளுக்குள் சர்வீசைப் போட்டு விட வேண்டும். 4. சர்வீஸ் போடுகிற வாய்ப்பைப் பெறுகிற குழுவே, வெற்றி எண்ணைப் பெற முடியும்.

12. சரியான சர்வீஸ் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

1. சர்வீஸ் போடுபவர், சர்வீஸ் பகுதிக்குள் நின்று தான் சர்வீஸ் போட வேண்டும். 2. பந்தை உயர்த்திப் போட்டுத்தான் (Toss)அடித்து அனுப்ப வேண்டும். 3. வலையின் இருபுறமும் உள்ளவர்களுக்கு இடையே, கையைத் தொடாமல் தான் சர்வீஸ் பந்து எதிர்க்குழுவிற்குச் செல்ல வேண்டும். எல்லைக்குள்ளே போய் விழுகிற பந்துதான் சரியான சர்வீசாகும்.

13. ஒரு குழு எப்பொழுது 1 வெற்றி எண்ணைப் பெறுகிறது?

ஒரு குழுவிலுள்ள ஒரு ஆட்டக்காரர் சர்வீஸ் போட்டு, அந்தப் பந்தை எதிர்க்குழுவினர் ஆட இயலாமல் தவறு செய்கிற போது தான், முதல் குழு 1 வெற்றி எண்ணைப் பெறுகிறது.

14. ஒரு குழுவில் சர்வீஸ் வாய்ப்பு எப்போது மாறுகிறது?

சர்வீஸ் போட்ட குழு ஆட்ட நேரத்தில் தவறு செய்கிற போது. சர்வீஸ் போட்ட குழு காவீஸ் வாய்ப்பை இழந்து

38