பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நல்ல தூய்மையான ஆடைகளையே அணிதல். 4 துய்மையான, சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் 5. மூக்கு வழியாகவே எப்போதும் சுவாசித்தல் 7. நமக்கு ஏன் நல்ல உறக்கம் தேவை? உறக்கமானது உடலுக்கும் மனதுக்கும் ஓய்வை அளிக்கிறது. உறக்கம் உறுப்புகளுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் உடலுக்கு சக்தியையும் வழங்குகிறது. பொதுவாக ஒருவர் இரவில் 8 மணி நேரம் வரை உற்ங்கினால், பல நன்மைகள் கிடைக்கும் 8. சிறந்த தோரணை என்றால் என்ன? (Posture) நாம் உட்கார்ந்திருக்கி ፴0 போதும். நிற்கும் போ தும், நடக்கும் போதும் ஒடுகிற போதும், நிமிர்ந்து உயர்ந்திருப்பது போல உடலை ஜோராக வைத்திருக்கும் நிலையையே தோரணை என்று கூறுகிறோம். 9. சிறந்த தோரணையினால் ஏற்படுகின்ற பயன்கள் யாவை? _ சிறந்த தோரணை உள்ள உடல் பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிக்கிறது. உடலின் சக்தியையும் சாமர்த்தியத் தையும் செழுமையாக வளர்த்து விடுகிறது. உடலின் உறுப்புகள் ஒப்பற்ற முறையில் பணியாற்றத் தூண்டுகிறது. துணை புரிகிறது. 10. உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால் உண்டாகும் நன்மைகள் யாவை? தொடர்ந்து செய்கின்ற உடற்பயிற்சியால், தேகம் கட்டுக் கோப்புள்ளதாக மாறுகிறது. உடலில் சதைப்பகுதி அதிகமாகாமல், உடலை அழகுள்ளதாக மாற் றுகிறது. சுவாசத்தை அதிகப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை விரைவு படுத்துகிறது. உடலை வலிமையுள்ளதாக ஆக்குகிறது. வெற்றிகரமான வாழ்கை வாழ வழி காட்டுவதுடன் வழி நடத்தியும் செல்கிறது. 11. நமக்கு உணவு ஏன் அவசியம்: வளமாக வாழ வேலை செய்ய உடல் வளர்ச்சி பெற. நலமுடன் செயல்பட உணவு அவசியம். உடலை பலமுள்ளதாக வளர்த்து, தாக்கும் நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும் உணவு நமக்கு அவசியமாகிறது. - 2i.